Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூன் 21 , மு.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகவும் சக்திவாய்ந்த சுப்பர்கணினிகளின் இறுதியான வரிசையில், சீனாவிலிருந்தான புதிய சுப்பர்கணினி முதலிடம் பிடித்துள்ளது. The 93 petaflop Sunway TaihuLight என்ற குறித்த புதிய சுப்பர் கணினியானது, சீனாவின் வூஷி நகரத்திலுள்ள தேசிய சுப்பர்கணினியியல் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்டுள்ள புதிய சுப்பர் கணினியானது, அதிகபட்சமாக, செக்கன் ஒன்றுக்கு 93,000 ட்ரில்லியன் கணிப்புகளை மேற்கொள்ளும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சுப்பர்கணினியானது, தற்போது வெளியிடப்பட்ட சுப்பர்கணினிகளின் வரிசைக்கு முந்தைய வரிசையில் முன்னணியில் இருந்த Tianhe-2 சுப்பர்கணினியை விட இரண்டு மடங்கு வேகமானது என்பதுடன் மூன்று மடங்கு செயல்திறன் வாய்ந்தது என சுப்பர்கணினிகளின் வரிசையை கடந்த திங்கட்கிழமை (20) வெளியிட்ட Top500 தெரிவித்துள்ளது. முந்தைய வரிசையில் முதலிடத்தில் இருந்த Tianhe-2வும் சீனாவையே சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறப்பட்ட சுப்பர்கணினியானது, மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு, வானிலை எதிர்வு கூறல், பாரிய தரவு ஆராய்ச்சி உள்ளிட்ட மென்பொருள்களை பிரதானமாகக் கொண்டிருக்கும் என, குறித்த புதிய சுப்பர்கணினி பற்றி Jack Dongarra எழுதிய பத்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுப்பர் கணினியானது, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 10.5 மில்லியன் processing coreகளையும் 40,960 nodeகளையும் கொண்டிருப்பதுடன், லினக்ஸினை தளமாகக் கொண்ட இயங்குதளத்தில் இயங்குகின்றது.
சுப்பர்கணினிகளுக்கான வரிசைப்படுத்தல் ஆரம்பித்த பின்னர் முதற்தடவையாக, இந்த வரிசையில், அமெரிக்காவை சீனா முந்தியுள்ளது. முதல் 500 சுப்பர்கணினிகளின் வரிசையில், சீனா 167ஐக் கொண்டிருக்கையில், அமெரிக்கா 165யே கொண்டிருக்கிறது.
முதல் 10 இடங்களில், நான்கு சுப்பர் கணினிகளை அமெரிக்கா கொண்டிருக்கின்றபோதும் முதலிரண்டு இடங்களையும் சீனாவே கொண்டுள்ளது. முதல் 10இல், ஏனைய நான்கு இடங்களை, ஜப்பான், சுவிற்ஸர்லாந்து, ஜெர்மனி, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் கொண்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
05 Jul 2025