2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

உலகின் மிகப் பெரிய MEGA விமானம்!

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஸ்ட்ரேட்டோலான்ச்' என்ற பெயர் கொண்ட, உலகின் மிகப் பெரிய விமானம், சில மாதங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது. இந்த 'மெகா' விமானத்தை உருவாக்கியவர் பால் ஆலென் ஆவார்.

இவர் கம்ப்யூட்டர் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டை (Microsoft), பில்கேட்சுடன் இணைந்து நிறுவியவர். இந்த விமானம் அனைத்து விதங்களிலும், மற்ற விமானங்களில் இருந்து வித்தியாசமானது. இதன் இறக்கைகள், கால்பந்து மைதானத்தை விட பெரியது. நீளம் 385 அடியாகும்.

இது சாதாரண விமானத்தை போல இருப்பதில்லை. உள்ளே 2 விமானி அறைகள் இருக்கும். 28 சக்கரங்கள், 6 என்ஜின்கள் கொண்டது. ஒவ்வொரு என்ஜினும் 4 ஆயிரம் கிலோ எடைமிக்கது. ஒவ்வொரு என்ஜினும், 6 'போயிங் 747' விமானத்தின் என்ஜின் திறனுக்கு சமமாகும்.

இது பெரிய விமானம் என்பதால், இதற்கு 2 விமான உடற்பகுதி தேவை. இரண்டிலும் ஒவ்வொரு விமானி அறை இருக்கும். வலது பக்கத்தில் உள்ள பகுதியில் தான் விமானி, இணை விமானி, என்ஜினியர் ஆகியோர் இருப்பார்கள். இவர்கள் தான் விமானத்தை இயக்குவார்கள். இடது புறம் உள்ள விமானி, கண்காணிக்க மட்டும் செய்வார்.

இதன் எடை 2 இலட்சத்து 26 ஆயிரம் கிலோ. இந்த விமானம், 6 இலட்சம் கிலோ எடைமிக்க சரக்குகளை. ஏற்றிச் செல்லும் திறன் பெற்றது.  இந்த விமானம் விண்வெளிக்கு, செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து ராக்கெட்டாக பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும் விண்வெளியில் அமைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையங்களுக்கு சரக்குகள் எடுத்துச்செல்லவும் பயன்படும். இதன் மூலம் விண்வெளி வீரர்கள், பூமியின் உயரமான சுற்று வட்டபாதைக்குச் செல்ல முடியும்.

அமெரிக்காவின் கொலரடோவில் நடந்த, 34 ஆவது விண்வெளி கருத்தரங்கில், 'ஸ்ட்ரேட் டோலான்ச்' விமானத்தின் முதல் பயணம், சில மாதங்களில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே விமானத்தின் இரண்டு கட்ட சோதனை பயணம் நிறைவடைந்துள்ளது. இதில் மணிக்கு 48 கிலோமீற்றர் மற்றும் 74 கிலோமீற்றர் வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது. இன்னும் 3 கட்ட சோதனைகள் நடத்தப்படவுள்ளது. 2011 இல் இதற்கான செலவு  2000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. தற்போதைய செலவு பற்றிய விபரம் இன்னமும் வெளியிடப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X