2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலகையே தம்பக்கம் திருப்பிய மணமக்கள்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 21 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முதல் மெட்டாவேர்ஸ் (Metaverse) திருமண நிகழ்வு தமிழகத்தில் நடைபெறவுள்ளது.

 மெட்டாவர்ஸ் என்பது மெய்நிகர் அதாவது விசுவல் ரியாலிட்டி (Virtual Reality) எனப் பொருள்படும். இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகிலேயே, முதன்முதலாக மெய்நிகர் திருமணம் நடைபெற்றது. புளோரிடாவைச் சேர்ந்த‌ ட்ரேசி மற்றும் டேவ் காக்னன் இருவரும் மெய்நிகர் திருமணம் செய்த முதல் ஜோடிகள் ஆவார்கள்.

தற்போது இதேபோல் ஒரு மெட்டாவர்ஸ் திருமணம் இந்தியாவில் தமிழகத்தில் வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கக்கது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில், தொழில்நுட்ப வல்லுனரான தினேஷ் என்பவருக்கும், ஜனகநந்தினி என்பவருக்குமே இத் திருமணமானது  நடைபெறவுள்ளது.

நந்தினியின் தந்தை சில மாதங்களுக்கு முன் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த திருமணத்தில் அவரது உருவத்தை 3டி தொழில்நுட்பத்தில் கொண்டு வரவுள்ளதாகவும்  இதனால் திருமண வரவேற்பில் நந்தினியின் தந்தை இடம்பெறுவார் எனவும் இதுவே  நந்தினிக்கு  நான் கொடுக்கும் பரிசு எனவும்  தினேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்திருமணத்தில்  ஹரிபொட்டர் கதைகளில் வரும் கட்டடங்களை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளதாகவும்  Hogwarts உலகில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் இத்திருமணத்தில் கலந்துகொள்ளலாம்” எனவும் மணமகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளும் இவர்களது சொந்தக்காரர்களின் உருவங்களையும்  3டி-யில் தயாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .