2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

எச்.பியின் அதிவேகமான முப்பரிமான பிறிண்டர்கள்

Shanmugan Murugavel   / 2016 மே 19 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்ரக முப்பரிமான பிறிண்டர்கள் இரண்டை வெளிப்படுத்தியுள்ள எச்.பி, போட்டியாகவுள்ள முப்பரிமான பிறிண்டர்களை விட தாம் அறிமுகப்படுத்தியுள்ள முப்பரிமான பிறிண்டர்கள் வேகமானவை எனத் தெரிவித்துள்ளது.

இது தவிர, தாம் அபிவிருத்தி செய்துள்ள “multi jet fusion” தொழில்நுட்பம் காரணமாக, வெளிப்படுத்தப்பட்டுள்ள முப்பரிமான பிறிண்டர்கள் இரண்டும் மிக உயர்ந்த தரத்திலான முன்மாதிரிகளை கட்டமைக்கும் எனவும் எச்.பி தெரிவித்துள்ளது. இந்நிலையில், இக்கண்டுபிடிப்பானது புரட்சிகரமானதாக அமையும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும் தற்போதுள்ள எச்.பியின் முப்பரிமான பிறிண்டர்களினால் ஒரு நிறம் மற்றும் ஒரு பொருளிலேயே அச்சிட முடியும் என்பதால் எச்.பியின் பயன்பாடு முப்பரிமான பிறிண்டர்களில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்ற நிலையில், வெளிபடுத்தப்பட்டுள்ள புதிய முப்பரிமான பிறிண்டர்களினால் இரண்டினால், முப்பரிமான பிறிண்டர் தொழிற்துறையில் முன்னணியில் உள்ள Stratasys, 3D Systemsகளுடன் போட்டியிட முடியும் என எச்.பி நம்புகிறது.

தமது அச்சுப் பொருள்களை நிர்வகிப்பதுக்கு ஏனைய பல உயர்ரக முப்பரிமான பிறிண்டர்கள் போன்று எச்.பியின் தொழில்நுட்பமானது லேசரைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, முதலில் தூளை தூவுவதன் மூலம் தடித்த படையை ஏற்படுத்தி, அதன் பின்னர் வெப்ப “inkjet”ஐ பயன்படுத்தி இரசாயனத்தைச் சேர்த்து அதன் மூலம் பொருட்களை ஒன்றாக்கி, இறுதிப் பொருள் வரும் வரைக்கும் மேற்கூறப்பட்டவாறு படை படையாக அடுக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் தமது இயந்திரங்கள், ஒவ்வொரு செக்கனிலும் 340 மில்லியன் புள்ளிகளை இலக்கு வைக்கும் என எச்.பி தெரிவித்துள்ளது.

மேற்படி முப்பரிமான பிறிண்டர்களில், ஆரம்ப கட்ட மாதிரியான Jet Fusion 3D 3200 மாதிரியானது துணி துவைக்கும் இயந்திரமளவுக்கு இருக்குமென்பதுடன் அடுத்த வருடம் சந்தைக்கு வரும்போது அதன் விலை 130,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் ரக மாதிரியான Jet Fusion 3D 4200 இன் விலை இதுவரையில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .