Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 31 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்பிளின் ஐபோன்களுக்கான organic light emitting diode (OLED) திரையை தென்கொரிய புதன்கிழமை (30), தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது அலைபேசிகளில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அப்பிள் பயன்படுத்தவுள்ளதாக பல வருடங்களாக வெளியிடப்பட்ட ஊகங்களையடுத்தே மேற்படித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
OLED திரைகளானவை மிக மெல்லியவை என்பதோடு, liquid crystal display (LCD) திரைகளை விட தரமுயர்ந்த புகைப்பட தெளிவையும் வழங்குகின்றன. 2018 ஆம் ஆண்டிலிருந்து ஐபோன்களில் OLED திரைகளை பயன்படுத்த அப்பிள் திட்டமிடுகிறது என கடந்த மாதம் தகவல் வெளியாகியிருந்தது.
திரை தொடர்பாக அப்பிள் நிறுவனத்துடன் இறுதி இணக்கப்பாட்டை எட்டும் நிலையை எல்.ஜி மற்றும் சம்சுங் டிஸ்பிளே அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த இரண்டு தொடக்கம் மூன்றாண்டுகளில் OLED திரை உற்பத்தித் திறனை கட்டமைக்க எல்.ஜி மற்றும் சம்சுங் டிஸ்பிளே ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து 12.8 பில்லியன் அமெரிக்க டொலர் மூலதனச் செலவை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இந்த இரு நிறுவனங்களுக்கு சில நிதியுதவிகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் மேற்படித் தகவல் தொடர்பாக எல்.ஜி டிஸ்பிளே மற்றும் சம்சுங் டிஸ்பிளே, அப்பிள் ஆகியவை கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
தற்போது, தனது தாய் நிறுவனமான சம்சுங் எலெக்ட்ரோனிக்குசுக்கும் வேறு சீன நிறுவனங்களுக்கும் OLED திறன்பேசித் திரையை விநியோகித்து வரும் சம்சுங் டிஸ்பிளேயானது, அப்பிளிடமிருந்து, எல்.ஜி டிஸ்பிளேயை விட அதிகளவிலான திரை ஒப்பந்தத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
33 minute ago
40 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
45 minute ago
2 hours ago