2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

ஒரு பில்லியன் இலக்கைத் தவறவிடும் மைக்ரோசொஃப்ட்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 20 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டில், ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட சாதனங்களில், தனது வின்டோஸ் 10 இயங்குதளத்தை இயக்குவதான இலக்கை தாம் தவறவிடப் போவதாக மைக்ரோசொஃப்ட் தெரிவித்துள்ளது.

தனது திறன்பேசி வர்த்தகத்தில் காணப்படும் பிரச்சினைகளினாலேயே மேற்கூறப்பட்டுள்ள இலக்கை அடைய முடியாமற் போயுள்ளதாக அறிக்கையொன்றில் மைக்ரோசொஃப்ட் தெரிவித்துள்ளது.

அன்ட்ரொயிட், அப்பிள் திறன்பேசிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் திறன்பேசிச் சந்தையில், தனது வின்டோஸ் திறன்பேசிகளுக்கான வாடிக்கையாளர்களை பெறுவதில் மைக்ரோசொஃப்ட் தடுமாறுகிறது.

தற்போதைய நிலையில், ஏறத்தாழ 350 மில்லியன் தனிப்பட்ட சாதனங்களில் வின்டோஸ் 10 இயங்குவதாக மைக்ரோசொஃப்ட் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜூலையில் வெளியிடப்பட்ட வின்டோஸ் 10 ஆனது, டெஸ்க்டொப் கணினிகள், மடிக்கணினிகள், டப்லெட்கள், திறன்பேசிகள் போன்றவற்றில் ஒரே இயக்குதளத்தில் இயங்கும்படியாக அமைக்கப்பட்டிருந்தது.

திறன்பேசி வர்த்தகத்தில் கவனஜ் செலுத்துவதாக மைக்ரோசொஃப்ட் தற்போது தெரிவித்துள்ள நிலையில், வின்டோஸ் 10 வெளியாவதற்கு சில காலங்கள் முதல் அறிவித்த, மேற்குறிப்பிட்ட ஒரு பில்லியன் இலக்கை அடைவதற்கு மூன்று வருடங்களுக்கு அதிகமாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்த வருட இறுதியுடன் வின்டோஸ் 10க்கான இலவச இற்றைப்படுத்தலை மைக்ரோசொஃப்ட் நிறுத்துகின்ற நிலையில், அண்மைய எதிர்காலத்தில், வின்டோஸ் 10ஐ பயன்படுத்த ஆரம்பிப்பவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .