2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

கூகுளின் பரிஸ் தலைமையகத்தில் சோதனை

Shanmugan Murugavel   / 2016 மே 25 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேடல் இயந்திர ஜாம்பாவானான கூகுளின் சந்தேகதுக்கிடமான வரி ஏய்ப்பு விசாரணையை துரிதப்படுத்தும் முகமாக பரிஸிலுள்ள கூகுள் தலைமையகத்தில் டசின் கணக்கான பிரெஞ்சுப் பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை (24) சோதனை மேற்கொண்டுள்ளனர்.

நிதி வழக்குத் தொடருநர் அலுவலகத்தினதூம் ஊழல் மற்றும் வரி மோசடிக்கெதிரான பிரான்ஸின் மத்திய அலுவலகத்தினதும் விசாரணையாளர்கள் பங்கேற்ற மேற்படிச் சோதனையின் போது 25 தகவல் தொழில்நுட்ப நிபுணர்களும் பங்கேற்றிருந்தனர்.

கூகுள் அயர்லாந்து நிறுவனமானது பிரான்ஸில் நிரந்தரத் தளத்தைக் கொண்டிருக்கின்றதா, அவ்வாறு கொண்டிருந்தால், பிரான்ஸில் இடம்பெறுகின்ற அந்த நடவடிக்கைகளின் அங்கங்களை வெளிப்படுத்தாமல் உள்ளதா என சோதிப்பதை இலக்கு வைத்தே விசாரணை மேற்கொள்ளப்படுவதாக வழக்குத் தொடருநர் அலுவலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது

தற்போது அல்பபெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக உள்ள கூகுள் ஆனது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் சிறிய வரியையே செலுத்துகின்றது. ஏனெனில், ஏறத்தாழ அதன் அனைத்து விற்பனைகளையும் அயர்லாந்திலேயே கூகுள் காட்டியுள்ளது.

இந்நிலையில் பிரெஞ்சுச் சட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கின்ற போதும், வரி செலுத்துவதை குறைப்பதற்காக உலகம் முழுதும் தமது பிரசன்னத்தை பல்தேசிய நிறுவனங்கள் விரிவாக்குகின்றன என ஐரோப்பிய பொதுமக்களிடத்தேயும் அரசாங்கங்களிடத்தேயும் கருத்து நிலவுகின்ற நிலையில் கூகுள் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .