Shanmugan Murugavel / 2016 மார்ச் 25 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணையத் தேடல் ஜாம்பவானான கூகுள், சிறிய, ஆனால் பயன்மிக்க இற்றைப்படுத்தலை கூகுள் போட்டோஸ் சேவையில் கடந்த செவ்வாய்க்கிழமை (22) அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட மேற்படி சேவையின் மூலம், நிகழ்வொன்றினையடுத்தோ அல்லது பயணமொன்றினையடுத்தோ பயனரின் சார்பில் தானாகவே புகைப்பட அல்பம் உருவாக்கப்படும். உருவாக்கப்படும் மேற்படி அல்பத்தில், உங்களது சிறந்த புகைப்படங்களின் தொகுப்புடன், நீங்கள் எங்கு சென்றவர்கள் என்று ஞாபகப்படுத்தும் முகமாக, எவ்வளவு தூரம் நீங்கள் பயணித்தீர்கள் அல்லது நீங்கள் எங்கு பயணித்தீர்கள் என்ற தகவல்களும் காணப்படும். இந்தப் புதிய வசதியை, “smarter albums” என கூகுள் அழைக்கின்றது.
மேற்படி வசதியானது உங்களுக்கு பரிச்சயமானதாக இருக்கலாம். ஏனெனில், கூகுள் போட்டோஸ், முன்னர் வழங்கிய “Assistant” என்ற தெரிவை ஒத்ததே இதுவாகும். Assistant தெரிவின் மூலம், உயிரூட்டும் GIF போன்ற புகைப்படங்களை உருவாக்க முடிந்ததுடன் photo montage, storieகளையும் உருவாக்க முடிந்திருந்தது. இந்நிலையில், புதிய அல்பம் ஆனது storiesகளையே பிரதீயீடு செய்கிறது.
இதேவேளை, அல்பம் உருவாக்கப்பட்டவுடன், அதை பயனர்களுக்கு கூகுள் பரிந்துரைக்கும். அதன்போது, பயனர்கள் அவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள முடியும். உதாரணமாக, தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்களின் கீழ் குறிப்புக்களை இட்டுக் கொள்ளலாம்.
மேற்கூறிய இற்றைப்படுத்தலானது, அன்ட்ரொயிட், iOS, இணையத்தில் வெளியாகியுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025