2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

காணொளிகளுக்கிடையிலான சுட்டியை நீக்கும் பேஸ்புக்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 23 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணொளி உருவாக்குநர்கள், தங்களுடைய காணொளிகளினிடையே சுட்டிகளைக் கொண்டிருக்கும் வசதியை, சமூகஊடக ஜாம்பவானான பேஸ்புக், திரும்பப் பெற்றுக் கொண்டது.

The call to action [CTA] என்றழைக்கப்படும் மேற்கூறப்பட்ட வசதியானது, ஒளிபரப்பாளர்களிடையே பிரபலமானதாகக் காணப்படுகிறது. ஏனெனில், குறித்த வசதியைப் பயன்படுத்தி, தமது சொந்தத் தளங்களை நோக்கி பயனர்களை கொண்டு செல்வதற்கான வழியாக, இதை ஒளிபரப்பாளர்கள் கையாண்டிருந்தனர். இந்நிலையிலேயே, தனது பயனர்களை வேறு எங்கும் அனுப்புவதிலும் பார்க்க, தன்னிடமே வைத்துக் கொள்வதற்காகவே மேற்படி நகர்வை பேஸ்புக் மேற்கொண்டுள்ளது.

மேற்குறித்த நகர்வானது, எந்தவித எச்சரிக்கையும் இல்லாமல், இம்மாத ஆரம்பத்தில் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள், செய்திகளை வாசிப்பதிலும் பார்வையிடுவதிலும் பேஸ்புக் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதை இந்நகர்வு எடுத்துக்காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய ஆராய்ச்சியொன்றின் முடிவில், ஐக்கிய இராச்சியத்தில், 28 சதவீதமான மக்கள், வாரத்தில் ஒரு தடவையாவது, பேஸ்புக்கை செய்தி மூலமாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், 35 வயதுக்கு குறைவானவர்களை கணக்கிட்டால், குறித்த சதவீதமானது 41 சதவீதமாக அதிகரித்து காணப்படுகிறது.

எவ்வாறெனினும் காணொளி உருவாக்குநர்கள், காணொளிகள் பகிரப்படும்போது காணப்படும் தகவல்களில், மேலே அல்லது கீழே சுட்டியை இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் காணொளியானது முழுமையான திரையில் பார்க்கப்படுமானால் சுட்டி தோன்றாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டுவிட்டரில் பதியப்படும் காணொளிகளுக்கு CTA சுட்டிகளை இணைக்க இன்னும் டுவிட்டர் அனுமதி வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .