Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 ஜூன் 10 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கெய்ன்ஸ் நகரத்திலுள்ள பெண்ணொருவர், தனது ஒரு வயதான மகள் சுவாசத்தை நிறுத்தியமையையடுத்து, அப்பிளின் Siriயினைப் பயன்படுத்தி அம்புலன்ஸை அழைத்துள்ளார்.
ஸ்டேஸி கிளீஸன் என்ற மேற்படி பெண், தனது ஐபோனை எடுத்துக் கொண்டு குழந்தைக்கு உதவ, குழந்தையின் அறைக்கு ஓடியுள்ளார். எனினும் மின்விளக்குக்காக ஆளியை அழுத்தும்போது தனது ஐபோனை கீழே விழுத்தியுள்ளார்.
இதனையடுத்து, முதலுதவியை அளித்துக் கொண்டு, Siriயை செயற்படுத்துமாறு ஐபோனை நோக்கி கூச்சலிட்ட அவர், அவசரகாலநிலை சேவைகளுக்கு அழைக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில், தனது மகளின் உயிரை Siri காப்பாற்றியதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த சம்பவமானது கடந்த மார்ச் மாதம் இடம்பெற்றபோதும், அப்பிளினை மேற்படி பெண்மணி தொடர்பு கொண்டமையையடுத்தே, மேற்படிச் சம்பவமானது இணயத்தில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.
Siri எனப்படுவது யாதெனில், அப்பிளின் ஐபோன் 4S மற்றும் அதற்குப் பிந்தைய ஐபோன், ஐபாட், ஐபொட் சாதனங்களில் காணப்படும் நுண்ணறிவு உதவியாகும். இதன் மூலம், உங்களுக்கு நெருக்கமான மொழியில் குரல் கட்டளைகளை வழங்குவதன் மூலம் அலைபேசி சாதனத்தையும் அதன் செயலிகளையும் இயக்க முடியும்.
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago