Shanmugan Murugavel / 2016 ஜனவரி 10 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்கால உலகில் பெரும்பாலோனோர் அதீத எடை காரணமாக அவதிப்படுகையில், அவர்களுக்குரிய வரப்பிரசாதமாக DietSensor அமையவுள்ளது.
நீங்கள் உண்ணுகின்ற உணவுகளின் காபோவைதிரேற் அளவையும் கலோரியையும் கணிப்பிட விரும்புவர்களுக்கு DietSensor உதவவுள்ளது. பிரான்ஸைத் தளமாகக் கொண்ட புதிய நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள சாதனமானது, உங்களது உணவுகளை ஸ்கான் செய்து, அதன் ஊட்டச்சத்துக்களின் அளவினை கணிப்பிடவுள்ளது.
இதன்படி, நீங்கள் மேற்படி சாதனத்தை உங்களுடன் வைத்துக் கொள்ளும்சாம் சமயத்தில், வெளியில் உணவகமொன்றில் சென்று உணவருந்தும் போதோ அல்லது வேறு யாரினதும் வீடுகளில் சென்று உணவருந்தும் போதோ, உங்களது உணவுக் கட்டுப்பாட்டினை பேண முடியும்.
கடந்த வாரம் லாஸ் வேகாஸில் இடம்பெற்ற நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியின்போது, மேற்படி சாதனமானது, சிறந்த புத்தாக்கத்துக்கான விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தச் சாதனம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த, இதன் இணை கண்டுபிடிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான ரேமி பொன்னஸே, இது அடுத்த தலைமுறை உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து செயலி எனத் தெரிவித்ததோடு, நீங்கள் யோசிக்கத் தேவையில்லை எனவும் உங்களுக்கான அனைத்து சிக்கலான கணிப்புக்களையும் இது மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் செயலியானது ஊட்டச்சத்துக்களை கண்காணிப்பதுடன், வைத்தியர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவியுடன் பிரத்தியேகமான உணவுக் கட்டுபாட்டையும் வழங்குகின்றது.
இந்தச் சாதனமானது, Bluetoothஐ பயன்படுத்தி SCiO எனப்படும் மூலக்கூற்று உணரியுடன் தொடர்புபட்டுள்ளதோடு, இது அதிருவதன் மூலமும் ஒளியுடன் வெவ்வேறு வழிகளில் தொடர்பைக் கொண்டிருப்பதன் மூலமாகவும் உணவினுள்ளே என்ன இருக்கின்றது என்பதைக் கண்டுபிடிக்கிறது.
இந்தச் சாதனம், 2016ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவில் சந்தைக்கு வரவுள்ளதுடன், இதன் பெறுமதி 249 அமெரிக்க டொலராக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
8 minute ago
12 minute ago
21 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
21 minute ago
26 minute ago