Editorial / 2018 ஜூன் 13 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை காண்டு இரசிக்க ரஷ்யாவுக்கு செல்லும் இரசிகர்கள் தங்களது அலைபேசிகள் மற்றும் மடிக்கணினி ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியை காண செல்வோரின் அலைபேசிகள், ரஷ்ய உளவாளிகளால் 'ஹேக்' செய்யக்கூடும் என்பதாலேயே இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஸ்யாவின் ஹோட்டல்களில் தங்கியிருக்கும்போதும், அல்லது வெளியில் எங்கேனும் அந்நாட்டில் ‘வை-பை’ (Wi-Fi) பயன்படுத்தினால் அது தொடர்பிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுமார் நான்கு இலட்ச இரசிகர்கள், ரஷ்யாவில் 31 நாட்கள் நடைபெற உள்ள உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை பார்க்க செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
16 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
34 minute ago
1 hours ago