2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

கூகுள் பிளஸ் மூடப்படுமா?

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’, பயனாளர்களின் கணக்கு விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்று எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மூடப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், டிரம்புக்கு ஆதரவாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம், பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், பயனாளர்களின் விவரங்கள் டிரம்புக்கு சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, பேஸ்புக் பயனார்களின் கணக்குளில் பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், சுமார் 5 கோடி பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருந்தமை தெரிய வந்தது. இந்நிலையில், மற்றொரு சமூக வலைதளமான ’கூகுள் பிளஸ்’-இலும் பயனாளர்களின் கணக்குகளை பராமரிப்பதில் குறைபாடு இருப்பதாகவும், அதனை சரிசெய்ய அந்நிறுவனம் தவறிவிட்டதாகவும் செய்தி வெளியானது.

இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கூகுள் பிளஸ் நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போதுமான வாடிக்கையாளர்களை ஈர்க்க தவறிவிட்டதாலும், விரிவான சேவையை வழங்கமுடியாத சூழல் இருப்பதாலும் ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைதளத்தை மூடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X