2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீனாவின் குப்பைகளால் ஆபத்து

Ilango Bharathy   / 2022 மார்ச் 04 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2014 இல் சீனா தனது சந்திர பயணத்தைத் தொடங்கியதிலிருந்து சுமார்  3 தொன் அளவிலான குப்பைகளை விண்வெளியில் கொட்டி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விண்வெளிக் குப்பைகள் ஏனைய செயற்கைக் கோள்களுக்கு இடையூறாக  உள்ளன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இக் குற்றச் சாட்டை சீனா மறுத்து வருகிறது.இந்நிலையில் சீனாவின் விண்வெளிக் குப்பை  இன்று(04) நிலவில் மோதவிருப்பதாகக் கூறப்படுகிறது.

மணிக்கு 9 ஆயிரத்து 300 கிலோ மீற்றர் வேகத்தில் மோதும் இப் பொருளால் நிலவின் 10 முதல் 20 மீற்றர்கள் அளவிற்கு துளை  ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாகவும்  விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X