Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிக்டாக் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும், இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் செயலிக்கு போட்டியாக லஸ்ஸோ என்ற செயலியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
குறிப்பாக அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட, இந்த லஸ்ஸோ செயலி இந்த ஆண்டு மே மாதம் வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் இந்த லஸ்ஸோ செயலியை வாட்ஸ்ஆப் செயலியுடன் ஒருங்கிணைக்கும் பணிகளில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளது.
பின்பு இந்த செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் டிக்டாக் செயலிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் சிங்கப்பூரில் உள்ள ஃபேஸ்புக் குழு ஒன்று இந்திய வெளியீட்டிற்கு லஸ்ஸோ செயலியை தயார்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்பு இந்த டிக்டாக் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கியவற்றை அறிந்து கொள்ள பேஸ்புக் நிறுவனம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் உதவியுடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் டிக்டாக் செயலிக்கு போட்டியை ஏற்படுத்தும் நோக்கில், லஸ்ஸோ சேவையில் இணைந்து கொள்ள கிரியேட்டர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட லஸ்ஸோ சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட லஸ்ஸோ செயலி கூகுள் பிளே ஸ்டோரில் பல லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர்.
அதேசமயம் லஸ்ஸோ செயலியை இந்திய தவிர இந்தோனிசியா போன்ற வளரும் சந்தைகளிலும் வெளியிட பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago