2026 பெப்ரவரி 08, ஞாயிற்றுக்கிழமை

ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ அங்கிகாரத்தை இழந்த பிரபலங்கள்

Editorial   / 2023 ஏப்ரல் 21 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப்ளூ டிக் அங்கிகாரத்திற்கு சந்தா கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளுக்கு கடந்த வாரம் கெடு திகதி நிர்ணயித்திருந்தார் ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்க்.

 இந்நிலையில், ட்விட்டரில் ப்ளூ டிக் சந்தா செலுத்தாத பயனர்கள் அந்த அங்கிகாரத்தை இழந்துள்ளனர். இதில் உலகளவில் மிகவும் பிரபலமாக அறியப்படும் பிரபலங்களும் அடங்குவர்.

 ஏப்ரல் 20-ம் திகதிக்குப் பின்னர் சந்தா செலுத்தப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் அங்கிகாரம் வழங்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது சந்தா செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக் அங்கிகாரம் நீக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் வணிக நோக்கில் ப்ளூ டிக் பெற்ற பயனர்களிடம் இருந்து சந்தா வசூலிப்பது. அதன்படி ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் சந்தா செலுத்தி அங்கிகரிக்கப்பட்ட கணக்கு என்ற அடையாளத்திற்கான ப்ளூ டிக்கை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

அதற்கு முன்னர், ஊடக நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கி வந்தது ட்விட்டர். இவர்கள் அனைவரும் சந்தா கட்டணம் செலுத்தாமல் இந்த அம்சத்தை பெற்றுவந்த சூழலில் தற்போது அதற்கான கட்டணத்தை இவர்களும் செலுத்த வேண்டி உள்ளது.

உலக அளவில் பிரபலமாக அறியப்படும் பாப் நட்சத்திரம் பியோனஸ், போப் பிரான்சிஸ், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ரியாலிட்டி டிவி பிரபலம் கிம் கர்தாஷியன் ஆகியோர் ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்துள்ளனர். ட்விட்டர் நிறுவனம் சந்தா செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக்கை நீக்க தொடங்கியுள்ள நிலையில் இவர்களது அங்கிகாரம் நீக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கான், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், விஜய், ஆலியா பட், சிம்பு, விஜய் சேதுபதி, கார்த்தி, நயன்தாரா உட்பட இந்திய திரை பிரபலங்கள். ரோகித் சர்மா, விராட் கோலி என இந்திய விளையாட்டு பிரபலங்கள். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ட்விட்டர் தளத்தில் ப்ளூ டிக் அங்கிகாரத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X