Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 15 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்பிளானது தனது App Storeஇன் TopChartsஇல் தொடர்ச்சியாக தனது செயலிகளையே முதன்மைப்படுத்தி வருகிறது. ஐபோனின் முதற் பத்து இலவச செயலிகளில் iMovie, iWork போன்ற அப்பிளின் செயலிகள் காணப்படுகின்றன.
இதன் மூலம் அப்பிளின் சொந்த செயலிகளானவை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபலமான செயலிகளை விட மிகப் பிரபலமாக App Storeஇல் விளங்குவதுடன், அதிக தடவை தரவிறக்கப்படுபவையாகவும் விளங்குகின்றன.
எனினும், உண்மையாகவே அப்பிளின் சொந்தச் செயலிகளானவை பிரபலலமாக விளங்குகின்றனவா அல்லது அப்பிளானது தனது சொந்த செயலிகளை சந்தைப்படுத்தும் முகமாக App Storeஇன் TopChartsஐ மாற்றுகிறதா என ஆய்வாளார்களால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி சந்தேகத்தை உறுதிப்படுத்தும் முகமாக குறிப்பிட்ட ஒரு நாளின் குறித்த நேரத்தில் App Storeஇன் TopChartsஇல் நான்காவது இடத்திலிருந்து எட்டாம் இடம் வரை இருக்கும் அப்பிளின் சொந்த செயலிகளானாவை, அடுத்த நாளில் TopChartsஇல் இருந்தே காணாமற் போகின்றன.
எனினும் இந்த TopChartsஐ கணிப்பிடுவதில் பிழைகள் காணப்படுகின்றதா என அப்பிள் கருத்து எதுவும் தெரிவிக்காதபோதும் அப்பிளானது TopCharts என்பது எவ்வாறு கணிக்கப்படுகின்றன என்பது தொடர்பில் எதுவித கருத்துக்களும் ஒருபோதும் தெரிவிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கட்டணம் செலுத்தப்படும் செயலிகளாக உள்ளவை, பெரும்பாலான பயனர்களுக்கு இலவசமாக கிடைப்பதால். அவை இலவச செயலிகளின் வரிசையில் இடம்பெறுவதுடன், அவை பிரபலமாகின்றன. 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின் தமது சாதனங்களை செயற்படுத்தியவர்கள் அல்லது வாங்கியவர்களுக்கு iMovie, GarageBand, Pages, நம்பர்ஸ், Keynote ஆகியவை இலவசம் என அப்பிள் அறிவித்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
33 minute ago
33 minute ago