Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பங்களிப்பின் பேரில் கட்டமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணிலிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
எனினும் இதன் ஆயுட்காலம் சில ஆண்டுகளில் முடிவடைய உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் சீனா தனக்கென ஓர் விண்வெளி நிலையமொன்றை அமைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளது.

அதன்படி ஏற்கனவே 3 விண்வெளி வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர்கள் தங்களது பணிகளை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பியுள்ளனர்.
இதன் அடுத்த கட்டமாக ஒரு பெண் உட்பட மூன்று விண்வெளி வீரர்களை நேற்று முன்தினம் சீனா விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளது.
சீனா தான் கட்டமைக்கும் விண்வெளி நிலையத்திற்கு “தியான்ஹே” (Tianhe)எனப் பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
24 minute ago
29 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
29 minute ago
37 minute ago