2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

தானியக்க வாகனங்களுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பம்

Editorial   / 2017 நவம்பர் 29 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில், இன்னும் 25 ஆண்டுகளில் மனிதர்கள் வாகனத்தை செலுத்தாமல், அவற்றை தானியக்க முறையில் இயங்கச் செய்வதற்கான செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக, தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் வாகனத்தை செலுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பதற்காக இவ்வாறானதொரு திட்டத்தை வகுத்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது, தானியக்க முறையில் இயங்கும் வாகனங்கள், முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவதற்கான அனைத்து வழிமுறைகளும் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக காலநிலை மாற்றத்தைக் கூட உணரக் கூடிய வகையில் அவை உருவாக்கப்படவுள்ளன.

தானியக்க வாகனங்களுக்கான தயார்படுத்தல்களை ஆரம்பித்துள்ளதாகவும் புதிய தொழில்நுட்பங்களை வரவேற்கும் நிறுவனங்கள் பலவற்றுடன் கைகோர்த்துள்ளதாகவும் தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து 'எனர்ஜி மைன்' நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கருத்து வெளியிடுகையில், “மனிதர்களை வாகனம் செலுத்த வேண்டாம், அதனைத் தவிருங்கள் எனக் கூற முடியாது. எனினும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடியதாக, நாம் உருவாக்கும் வாகனங்கள் ஆபத்து ஏற்படாதவாறு மனிதர்களை பாதுகாக்கக் கூடியவை” எனத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X