2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

நோய்களைக் கண்டறிகிறது AI அமைப்பான Watson

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில சிக்கலான மருத்துவ விடயங்களை தீர்ப்பதற்காக, IBM-இன் செயற்கை நுண்ணறிவு இயக்குதளமான Watson, ஜேர்மனியிலுள்ள வைத்தியர்களுடன் பணியாற்றவுள்ளது.

ஜேர்மனியின் மர்பேர்க் நகரத்திலுள்ள பல்கலைக்கழக வைத்தியசாலையின், கண்டறியமுடியாத மற்றும் அரிதான நோய்களுக்கான நிலையத்திலேயே, IBM-இன் செயற்கை நுண்ணறிவு இயக்குதளமான Watson நிலை கொண்டுள்ளது.

இதுவரையில், ஆறு விடயங்களை Watson பார்வையிடுள்ளபோதும், அதில் எத்தனையை, Watson சரியாக கணித்தது என்பது தெளிவில்லாமல் உள்ளது. தனியார் வைத்தியசாலைக் குழுமமான Rhon-Klinkum AG-உடனான Watson-இன் இணைப்பானது, இந்த வருட இறுதியிலிருந்து, சோதனை ரீதியாக ஆரம்பிக்கவுள்ளது.

பரந்த மருத்துவ அறிவுடன், நோயாளர்களின் மருத்துவக் கோப்புக்களை வாசிக்கும் Watson, தொடர்ச்சியான ஆலோசனைகளை வழங்குகின்றது. மருத்துவத் துறையில், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், கூகுளின் செயற்கை நுண்ணறிவான DeepMind, ஐக்கிய இராச்சியத்திலுள்ள சில வைத்தியசாலைகளுடன் இணைந்துள்ளது.

எவ்வாறெனினும், நோயாளர்களின் தரவுகளை, தொழில்நுட்ப நிறுவனங்கள் கொண்டிருப்பது குறித்து சர்ச்சை காணப்படுகிறது. நோயாளர்களின் பதிவுகள் வழங்கப்பட முன்னர், நோயாளர்களிடமிருந்து, மேலதிகமான தெளிவான ஒப்புதல் பெறப்பட வேண்டும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .