Shanmugan Murugavel / 2016 ஜூலை 13 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர் உட்புகாது என விளம்பரப்படுத்தப்பட்ட சம்சுங் திறன்பேசி ஒன்று, முன்னணி உற்பத்தி மதிப்பீடு இணையத்தளமொன்றின் நீரில் மூழ்கும் சோதனையில் தோல்வியடைந்துள்ளது.
நீருக்கடியில் ஐந்து அடி ஆழத்தில் இருப்பது போன்ற நிலைமைகளை வழங்கக் கூடிய தொட்டியொன்றினுள், சம்சுங் கலக்ஸி எஸ்7 அக்டிவ் திறன்பேசியை இட்டபோது, அது இயங்குவதை நிறுத்தியுள்ளது.
மேற்குறித்த சோதனையை இரண்டாவது மாதிரியொன்றில் மேற்கொண்ட போது, அம்மாதிரியும் பாதிப்படைந்ததாக குறித்த சோதனையை மேற்கொண்ட Consumer Reports தெரிவித்துள்ளது.
முதலாவது திறன்பேசியை அரை மணித்தியாலத்தின் பின்னர் தொட்டியிலிருந்து அகற்றியபோது அதன் திரையானது இயங்கவில்லையென்றதுடன் அதில் பச்சைக் கோடுகள் காணப்பட்டிருந்தன. தவிர, கமெரா வில்லைகள் இரண்டிலும் குமிழிகளும் தோன்றியிருந்தன. இரண்டாவது திறன்பேசியிலும் மேற்கூறிய அனைத்து குறைபாடுகளும் காணப்பட்டிருந்தன.
இந்நிலையில், குறையுள்ள சாதனங்கள், குறையற்ற சாதனங்களில் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று நீர் உட்புகாமல் இருக்காது என்பதை சம்சுங் ஏற்றுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் விற்கப்பட்டுள்ள கலக்ஸி எஸ்7 அக்டிவ், ஐ.பி.68 தரச் சான்றிதழ் பெற்றது என சம்சுங் இணையத்தளம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த சோதனையை மேற்கொண்ட Consumer Reports, ஐபோன் 4இன் உணரியிலுள்ள பிரச்சினையை கண்டுபிடித்ததன் மூலம் ஆறு வருடங்களுக்கு முன்னர் பிரபலமடைந்திருந்தது.
இதேவேளை, கலக்ஸி எஸ்7, கலக்ஸி எஸ்7 எட்ஜ் மாதிரிகளும் ஐ.பி.68 தரச் சான்றிதழ்களை கொண்டுள்ள நிலையில், மேற்படி திறன்பேசிகளிலும் மேற் கூறப்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவை இந்தச் சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளன.
14 minute ago
37 minute ago
49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
37 minute ago
49 minute ago
54 minute ago