Editorial / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூரிய குடும்பத்தில் சனி கிரகத்தில் 20 புதிய நிலவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றிற்கு மக்கள் பெயர் சூட்ட ஆராய்ச்சியாளர்கள் வாய்ப்பளித்துள்ளனர்.
சூரிய குடும்பத்தில் அதிக துணை கோள்களை (நிலவுகளை) கொண்ட கோளாக வியாழன் இருந்து வந்தது. வியாழன் கோளில் 79 நிலவுகள் இருக்கின்றன.
இந்நிலையில் ஸ்காட் ஷெப்பர்ட் தலைமையிலான விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில் சனி கிரகத்தில் புதிதாக 20 நிலவுகளை கண்டறிந்துள்ளனர். இதனை அமெரிக்காவில் உள்ள சர்வதேச வானியல் ஒன்றியத்தின் சிறு கிரக மையத்தில் ஷெப்பர்ட் தெரிவித்துள்ளார்.
இன்னும் 100 சின்னஞ்சிறிய நிலவுகள் இருப்பதாகவும் ஷெப்பர்ட் கூறினார்.
இதனால், சனி கிரகத்தில் உள்ள நிலவுகளின் எண்ணிக்கை 82 ஆனது. இதன்மூலம் சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட கோள் என்னும் சிறப்பை சனி பெற்றது.
கண்டுபிடிக்கப்பட்ட 20 நிலவுகளுக்கும் பொதுமக்கள் பெயர் சூட்டலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதற்காக #NameSaturnMoons என்னும் ஹேஸ்டேக் உடன், தாங்கள் விரும்பும் பெயரும் அதற்கான விளக்கத்தையும் @SaturnLunacy என்னும் டுவிட்டர் பக்கத்தில் பொதுமக்கள் பதிவிடலாம்.
ஒக்டோபர்., 14 முதல் டிசம்பர் 6 வரை பொதுமக்கள் விரும்பும் பெயரை பதிவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
6 minute ago
50 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
50 minute ago
58 minute ago
2 hours ago