Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஜூன் 20 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனிதர்கள் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுப்பதால் பூமியின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நாம் வாழும் பூமி 1993 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 சென்டிமென்டர் கிழக்கே சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக பூமியின் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி தகவலில் 1993ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மட்டும் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீர் மனிதர்களால் உறிஞ்சப்ப்ட்டு உள்ளது, இது 6 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் குறைவது பூமியின் சுழற்சியை மாற்றுவதாக 2016ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். ஆனால் தற்போதுவரை இந்த சுழற்சி மாற்றங்களுக்கு நிலத்தடி நீரின் குறிப்பிட்ட பங்களிப்பு ஆராயப்படவில்லை. 1993 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா ஆகிய நாடுகளில், மத்திய அட்சரேகைகளில் அதிகளவு நீர் மறுபகிர்வு செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
பூமியின் சுழற்சி பெரிதும் மாறியுள்ளதாகவும். இதன் மூலம் பூமியின் பல்வேறு பகுதியில் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கு நிலத்தடி நீர்மட்டம் குறைவு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த முழுமையான தரவுகள் இல்லை எனவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க பல்வேறு நாடுகள் பல திட்டங்களை தீட்டுவதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை மாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
பூமியின் சுழற்சி துருவமானது பொதுவாக ஒரு வருடத்திற்குள் பல மீட்டர்கள் மாறுவதால் நிலத்தடி எடுப்பதன் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் பருவங்களை மாற்றுவதற்கான எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
42 minute ago
43 minute ago
49 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
43 minute ago
49 minute ago
59 minute ago