Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெஸ்லாவானது, தனது அரைத் தானியங்கி வாகனம் செலுத்தும் அமைப்பான Autopilotஐ இற்றைப்படுத்துவதாக டெஸ்லா மோட்டேர்ஸ் நிறுவனத்தின் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இதில், சாரதியில்லாத நிலையில், வாகனம் கட்டுப்படுத்தப்படும்போது புதிய மட்டங்களை அடைய முடியுமென்பதுடன், கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை தடுக்கக் கூடிய வகையில் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கூறப்பட்ட இற்றைப்படுத்தலானது, இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில், இணையம் மூலமான மென்பொருள் இற்றைப்படுத்தலினூடாக கிடைக்கும் என மஸ்க் தெரிவித்துள்ளார். குறித்த இற்றைப்படுத்தலின் மூலம், டெஸ்லாவின் மின்சார ஆடம்பரக் கார்களுக்கு, அவற்றைச் சுற்றி என்ன இருக்கின்றது என்றும், எப்போது தடுப்பியை பிரயோகிக்க வேண்டும் என்றும் உணர்த்தப்படவுள்ளது.
சாரதியில்லாத நேரத்தில் வாகனம் செலுத்தப்படும்போது, தவறானதொரு பாதுகாப்பு உணர்வை பயனர்களுக்கு Autopilot வழங்குகின்ற என்ற பரவலான விமர்சனங்களைத் தொடர்ந்தே மேற்குறித்த இற்றைப்படுத்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இற்றைப்படுத்தப்பட்ட அமைப்பில், காரின் கட்டுப்பாட்டை எடுக்குமாறு விடுக்கப்படும் குரல்வழி எச்சரிக்கையை செவிமடுக்காவிட்டால், சாரதிகள், அமைப்பை பயன்படுத்துவதை தற்காலிகமாக தடை செய்யப்படுகிறது.
டெஸ்லாவின் Autopilot அமைப்பு, கடந்த ஒக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், டெஸ்லா மொடல் எஸ் சாரதியான ஜோஷுவா பிறவுண், குறித்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருந்த நிலையில், ட்ரக்குடன், கடந்த மே ஏழாம் திகதி புளோரிடாவில் மோதி மரணமானதாக கடந்த ஜூலையில் வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே, குறித்த அமைப்பு கவனத்திற்குட்பட்டிருந்தது.
மறுசீரமைக்கப்பட்ட அமைப்பில், எந்தவொரு வாகனமும் முன்னால் இல்லாதபோது, மணிக்கு 72 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும்போது, சுக்கானிலிருந்து, ஒரு நிமிடத்துக்கு மேல் கையை எடுக்கும்போது ஒலி எச்சரிக்கை எழுப்பப்படும் என்றும், மணிக்கு 72 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்துக்கு அதிகமான வேகத்தில் கார் ஒன்று செல்லும்போது, சுக்கானிலிருந்து மூன்று நிமிடங்களுக்கு அதிகமாக கையை எடுத்தால், ஒலி எச்சரிக்கை எழுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
27 minute ago
37 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
37 minute ago
5 hours ago