2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

புதிய உள்ளிணைப்புகளுடன் கூகுளின் இன்பொக்ஸ் இமெயில்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

செயற்றிட்ட முகாமைத்துவ சேவையான Trello மற்றும் கணினி நிரல் களஞ்சியமான GitHubக்காக, தனது இன்பொக்ஸ் மின்னஞ்சல் செயலியில் புதிய மூன்றாந்தரப்பு உள்ளிணைப்புகளை கூகுள் உள்ளடக்கியுள்ளது.

இந்நிலையில், மேற்கூறப்பட்ட இரண்டு நிறுவனங்களிடமிருந்து செயற்றிட்டங்கள் தொடர்பான மின்னஞ்சலை பயனர்கள் தற்போது பெறும்போது, இன்பொக்ஸ் ஆனது தகவல்களை, பயணம், நிகழ்வு மற்றும் செய்தி மடல் மின்னஞ்சல்களாக பிரிக்கவுள்ளது.

Trelloவுக்கு, உங்களது செயற்றிட்ட அட்டையில் உள்ள அண்மைய செயற்பாடுகளை நீங்கள் பெறவுள்ளதுடன், GitHub மின்னஞ்சல்களில், கணினி நிரல்களில் ஏற்படும் மாற்றங்களை காண்பிக்கவுள்ளது. இதேவேளை, இரண்டு சேவைகளிடமிருந்தும் பெறப்படும் தகவல்களை, அன்ட்ரொயிட் அல்லது ஐ.ஓ.எஸ் சாதனத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

மேற்குறிப்பிட்ட செயலி உள்ளீடுகள் ஆனவை, இன்பொக்ஸின் அடுத்த படி எனக் கருதப்படுவதுடன், கூகுளின் ஜிமெயில் அணிக்கு, எவ்வாறு மின்னஞ்சல் செயற்பாடுகள் பணியாற்றுகின்றன என்று மீண்டும் சிந்திப்பதற்கான சோதனைக்களமாக உள்ளது.

தனது அழகான வடிவமைப்புக்கு மேலாக, பயனர்கள், நிகழ்ச்சிகள், விமானங்கள் மற்றும் செய்ய வேண்டிய பணிகளை இன்பொக்ஸ் நினைவுறுத்துகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .