Menaka Mookandi / 2016 மார்ச் 29 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
246 வருட வரலாற்றில், மிகவும் பிரகாசமானதொரு வால் நட்சத்திரம், பூமியைக் கடந்து செல்வதை எதிர்வரும் நாட்களில் தொலைநோக்குக் கருவியின் உதவியுடன் காணக்கூடியதாக இருக்கும் என்று வானியல் நிபுணர் கீர்த்தி விக்கிரமரத்ன தெரிவித்தார்.
பச்சை நிறத்துடைய இந்த வால் நட்சத்திரம், சீ2016பீஏ14 என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் இது 3000 அடி விட்டத்தைக் கொண்டுள்ளதாகவும் இது கடந்த 22ஆம் திகதியன்று பூமியிலிருந்து 22 இலட்சம் மைல்கள் தொலைவில் பயணித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் யூகித்துள்ளனர்.
இதற்கு முன்னர், கி.பி 1770இர் டீ1770எல்ஐ லெக்சல் என்ற வால் நட்சத்திரமொன்று பூமிக்கு அருகில் பயணித்துச் சென்றுள்ளது என்றும் கீர்த்தி விக்கிரமரத்ன கூறினார்.
கலிபோனியாவிலுள்ள நாசா நிறுவனத்தின் ஜேபிஎல் பரிசோதனை நிலையத்தின் ரேடார் கருவிகள் மூலம் சீ2016பீஏ14 எனும் வால் நட்சத்திரம் அவதானிக்கப்பட்டுள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், குறித்த வால் நட்சத்திரத்தின் ஒரு பக்கம் செங்கல்லொன்றின் தோற்றமும் மறுபுறம் பெயார்ஸ் காயொன்றின் தோற்றமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 minute ago
24 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
40 minute ago
51 minute ago