Shanmugan Murugavel / 2016 மார்ச் 26 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்கள் பிளக்பெரி பாவனையாளராக இருந்து, உங்களது நண்பர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளுபவர்களாக இருந்தால் இச்செய்தி நிச்சயம் உங்களுக்கு கவலையளிக்கும்.
தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ள பிளக்பெரியின் புதிய இயங்கு தளமான பிளக்பெரி 10இலிருந்து விலகப்போவதாக பேஸ்புக்கினால் நிர்வகிக்கப்படும் வட்ஸ்அப் விலகியிருந்த நிலையில், தற்போது, பேஸ்புக்கும் பேஸ்புக் மெசஞ்சரும் விலகவுள்ளன.
பிளக்பெரியின் இயங்குதளத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் அறிமுகத்தை மேற்கொண்ட வட்ஸ்அப், கடந்த மாதம் அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தது. வட்ஸ்அப் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் 70 சதவீதமான திறன்பேசிகள், பிளக்பெரி அல்லது நோக்கியாவாக இருந்த நிலையில், தற்போது, 99.5 சதவீதமான அலைபேசி இயங்குதளங்கள், கூகுள், அப்பிள், மைக்ரோசொஃப்ட்இல் இயங்குகின்ற நிலையில், பெரும்பான்மையானோர் பயன்படுத்தும் அலைபேசி இயங்குதளங்களில் கவனஞ் செலுத்தும் பொருட்டு, 2016ஆம் ஆண்டு இறுதியிலிருந்து பிளக்பெரி 10 உள்ளடங்கலாக பிளக்பெரி, நொக்கியா S40, நொக்கியா சிம்பியன் S60, அன்ட்ரொயிட் 2.1, அன்ட்ரொயிட் 2.2, வின்டோஸ் 7.1 ஆகிவற்றுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக வட்ஸ்அப் அறிவித்திருந்தது.
இந்நிலையில், வட்ஸ்அப்பினை பின்பற்றிய பேஸ்புக்கும் பேஸ்புக் மெசஞ்சரும், இவ்வருட இறுதியோடு பிளக்பெரியின் இயங்கு தளத்துக்கான ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளது. எனினும், அன்ட்ரொயிட் இயங்குதளத்தில் இயங்கும் பிளக்பெரி பதிப்புக்களான பிளக்பெரி Priv போன்றவற்றில் இவை இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, பேஸ்புக்கின் அலைபேசி இணையப் பதிப்பை பிளக்பெரி பயனர்கள் பாவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
54 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
2 hours ago