Shanmugan Murugavel / 2016 நவம்பர் 18 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தகவல் பாதுகாப்புத் தொடர்பாக ஐரோப்பாவில் ஏற்பட்ட கரிசனைகளுக்கு பதிலளிக்கும் முகமாக, விளம்பர இலக்குவைப்புக்காக, ஐரோப்பாவிலுள்ள பயனர்கள் பற்றிய தகவல்களை, தனது தாய் நிறுவனமான பேஸ்புக்குக்கு வழங்குவதை, WhatsApp இடைநிறுத்தியுள்ளதாக, குறித்த விடயத்துக்கு நெருக்கமான தகவல் மூலமொன்று, கடந்த செவ்வாய்க்கிழமை (15), தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவிலுள்ள அதிகாரிகளுடன் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, spam-உடன் போராடுவது போன்ற நோக்கங்களுக்காக மட்டுமே WhatsApp பயனர்களின் தரவைப் பயன்படுத்த WhatsApp நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக, மேற்குறிப்பிட்ட தகவல் மூலம் தெரிவிக்கின்றது.
மேற்கூறப்பட்ட இடைநிறுத்தமானது, தகவல் பாதுகாப்புத் தொடர்பான கரிசனைகளை ஒழுங்குபடுத்துநர்கள் பகிர்ந்து கொள்வதற்கு நேரத்தை வழங்குவதுடன், குறித்த விடயத்தை எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பாக தீர்மானிபதற்கான சந்தர்ப்பத்தை பேஸ்புக்குக்கு வழங்குகிறது.
பேஸ்புக், WhatsApp-இலிருந்து தரவுகளைப் பெறுவதை, தகவல் பாதுகாப்பு கரிசனையைக் காரணங்காட்டி, இவ்வாண்டு செப்டெம்பர் மாதம், ஜேர்மனிய தரவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்தியிருந்தனர்.
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago