2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

பேஸ்புக்கினால் மெசஞ்சரை நோக்கித் தள்ளப்படும் அலைபேசி பயனர்கள்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 09 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தள ஜாம்பவானான மெசஞ்சர் இல்லாமல், இனிமேல் தகவல்களை கையாள முடியாது என அன்ட்ரொயிட் சாதனங்களிலுள்ள பேஸ்புக் பயனர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதாவது, அலைபேசியிலுள்ள இணைய உலாவியின் மூலம் பேஸ்புக்குக்குச் சென்று தகவல்களை வாசிக்கும் வசதி இல்லாமற் செய்யப்பட்டுள்ளது.

வரும் மாற்றத்தினை பற்றி அறிவிக்கும் தகவலானது தற்போது தோன்றுவதுடன், சில அலைபேசிகளில் மேற்படி தகவலுக்கு பின்னர் Play Storeக்கு அழைத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், மேற்படி நகர்வானது, தனது, 2014ஆம் ஆண்டு மெசஞ்சர் கொள்கையின் நீடிப்பே என பேஸ்புக் தெரிவித்துள்ளது. மெசஞ்சர் செயலியைப் பயன்படுத்துவது, வேகமாக இருக்குமென்றும், மேம்படுத்தப்பட்ட ஊடாடல்களை வழங்குமென்றும் அறிக்கையொன்றில் தெரிவித்த பேஸ்புக், மெசஞ்சரிலுள்ள 900 மில்லியன் பேருக்கு, தொடர்ந்து சிறந்த அனுபவத்தை வழங்கவுள்ளதாக மேலும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, பேஸ்புக்கின் உத்தியோகபூர்வ செயலியூடாக தகவல்களை கையாளமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட நகர்வானது மெசஞ்சரை நோக்கி பயனர்களை கொண்டு செல்ல மேற்கொள்ளப்படும் நகர்வு என்றபோதும், மின்கலத்தின் ஆயுட்காலம் மற்றும் தனியுரிமை பற்றிய கவலைகளை காரணமாகக் காட்டியுள்ள சில பயனர்கள், தங்களுக்கு மெசஞ்சரைப் பயன்படுத்த விருப்பம் இல்லையென்று தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .