Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 25 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வாழ் பேஸ்புக் பயனர்களை ஒன்றிணைக்கின்ற பேஸ்புக் தமிழா 2016 என்கின்ற நிகழ்வு, கடந்த வார இறுதியில் கொழும்பு பம்பலப்பிட்டி லோரன்ஸ் வீதியில் அமைந்திருக்கும் AVS மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றிருந்தது.


முகம் காணாது இணையவழி இணைந்திருந்த இளைஞர் யுவதிகளை நேரில் ஒன்றிணைத்து அறிமுகத்தை மேற்கொள்வதுடன் அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவருவது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்காக அமைந்திருந்ததுடன், எதிர்காலத்தில் எப்படி இத்தகைய நண்பர்கள் குழாம் காத்திரமாக சமூகத்தில்,சமூக பிரச்சனைகள் தொடர்பில் இயங்கலாம் என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.




பேஸ்புக் மூலம் தங்களை வளர்த்துக்கொண்ட தனி நபர்களின் திறமைகள் இந்த நிகழ்ச்சியின் போது வெளிப்பட்டன.நகைச்சுவை பட்டிமன்றம், குக்கூ இசை நிகழ்ச்சி, தனி நபர் திறமை வெளிக்காட்டல்கள், சமூகம் பற்றிய திறந்த கலந்துரையாடல்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் என்று பல்வேறு அம்சங்களை கொண்டமைந்த இந்த நிகழ்ச்சி மதியபோசனத்துடன் நிறைவுக்கு வந்தது.





பேஸ்புக்தமிழா என்கின்ற இந்த நண்பர்கள் குழாம், தங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேஸ்புக்கில் பேஸ்புக் தமிழா என்கின்ற பக்கத்தில் தொடர்ந்தும் அறியத்தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago