Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூலை 26 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
எனினும் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஒலிம்பிக்கைக் கொண்டாடும் வகையில் கூகுள் குரோம் பிரவுசரின் டைனோசர் கேமுக்கு (T - Rex ரன்) புதுப்பொலிவு கொடுத்துள்ளது கூகுள்.
வழக்கமாக குரோம் பிரவுசரில் இணையம் துண்டிக்கப்படும்போது இவ் டைனோசர் கேமை பெரும்பாலானவர்கள் விளையாடி இருக்க வாய்ப்புகள் உள்ளது.
டைனோசரின் பாதையில் குறுக்கிடும் கள்ளிச் செடிகள் மாதிரியான தடைகளில் இருந்து தப்பிப்பதுதான் இந்த கேமை விளையாடும் முறையாகும்.
அந்தவகையில் இவ்விளையாட்டில் தற்போது சில தீம்கள் மாற்றப்பட்டுள்ளன. ஒலிம்பிக் ஜோதி, அலைசறுக்கு, தடை தாண்டுதல், நீச்சல் என சில ஒலிம்பிக் ஈவெண்டுகள் போன்றவை புதிதாக டைனோ கேமில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதை தொலைபேசி மற்றும் கணினியில் விளையாடலாம். இவ்விளையாட்டின் இறுதியில் ஒலிம்பிக் போலவே பதக்கமும் கொடுக்கப்படுகிறது.
மேலும் இணைய இணைப்பை துண்டித்தோ அல்லது CHROMEDINO.COM பயன்படுத்தியோ விளையாடலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago