2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

புற்றுநோயில் இருந்து காப்பாற்றும் பிரா

Editorial   / 2024 ஜனவரி 17 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீங்கள் தேநீர் அருந்தும்போது கூட உங்கள் மார்பகங்களில் உள்ள கட்டிகளைக் கண்டறியும் அல்ட்ராசவுண்ட்(Ultrasound) சாதனத்தை உங்கள் ப்ராவின் மேல் அணிந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள்.

துருக்கியைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர். ஜனன் தாடெவிரென் தனது குழுவினருடன் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின்(Massachusetts Institute of Technology ) (எம்ஐடி) ஆய்வகத்தில் ப்ராவின் மேல்  அணிந்திருக்கும்  அல்ட்ராசவுண்ட்(Ultrasound) சாதனத்தை   உருவாக்கியுள்ளார்.

மார்பக புற்றுநோயால் இறந்த தனது அத்தையின் நினைவாக இந்த கருவியை அவர் தயார் செய்துள்ளார்.

மார்பக புற்றுநோயின் அதிக ஆபத்து காரணமாக அடிக்கடி மேமோகிராம் (mammograms) செய்ய அறிவுறுத்தப்பட்ட பெண்களுக்கு இந்த சாதனம் உதவியாக இருக்கும். அத்தகைய பெண்கள் இந்த கருவி மூலம் இரண்டு மேமோகிராம்களுக்கு இடையில் கூட மார்பக புற்றுநோயை கண்காணிக்க முடியும்.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் மார்பக புற்றுநோயால் தான் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில், 23 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும், 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.

நன்றி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .