2025 மே 03, சனிக்கிழமை

மனிதனை வென்ற தொழில்நுட்பம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 16 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூகுளின் DeepMind செயற்கை நுண்ணறிவுக்கும் Go உலக சம்பியனான லீ சீடோலுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை (15) நிறைவுக்கு வந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், 4-1 என்ற ரீதியில் கூகுளின் DeepMind செயற்கை நுண்ணறிவான AlphaGo வெற்றி பெற்றது.

ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனைத் தளமாகக் கொண்ட DeepMindஇனால் உருவாக்கப்பட்ட AlphaGo ஆனது, கடந்த 2014ஆம் ஆண்டு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கூகுளினால் வாங்கப்பட்டிருந்தது.

மேற்படி இறுதிப் போட்டியில் சிறிய நெருக்கடியை எதிர்நோக்கியதாகவும் ஆனால் அதை எதிர்கொண்டு வெற்றியை பெற்றதாக DeepMindஇன் பிரதம நிறைவேற்றதிகாரி டெமிஸ் ஹஸ்சபிஸ் தெரிவித்தார்.

மேற்கூறப்பட்டவாறு, உலகின் தலைசிறந்த வீரரொருவரிடம் தவறை புரிந்து விட்டு, AlphaGo மீண்டும் வந்து வெற்றி பெற்றமையானது செயற்கை நுண்ணறிவின் அபார வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

DeepMindஇன் மேற்படி AlphaGo ஆனது, தந்திரமாக நகர்வுகளை மேற்கொள்ளுவது தவிர, தனக்குத்தானே கற்பிக்கும் வசதியையும் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகவே, நான்காவது போட்டியில் தோல்வியடைந்த பின்னரும் ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற முடிந்தது.

இத்தொடரில் தோல்வியடைந்ததன் மூலம், 18 தடவை உலக சம்பியனான லீ சீடொல், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுப் பணத்தை தவறவிட்டுள்ளார்.

மேற்படி Go விளையாட்டு என்னவெனில் 19*19 கட்டங்களை கொண்டமைந்த பலகையில் கற்களை வைப்பதன் மூலம் யார் அதிக பகுதியைக் கட்டுப்படுத்துவது என்ற 2,500 வருடங்கள் பழமை வாய்ந்த விளையாட்டாகும். கணினியைப் பொறுத்தவரை, சதுரங்கத்தை விட இது கடினமான விளையாட்டாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X