2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

யூதர்களைத் தேர்ந்தெடுக்கும் Plug-inக்கு கூகுள் தடை

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 08 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத்திலுள்ள யூதப் பெயர்களை, மூன்று தொகுதி சதுர அடைப்புக் குறிகள், அல்லது அடைப்புக்குறிகள் மூலம் சூழுவதன் மூலம் அடையாளங்காண பயன்படும், தேடல் இயந்திர ஜாம்பவானான கூகுளின் இணைய உலாவியான குரோமில் உள்ள extensionஐ கூகுள் தடை செய்துள்ளது.

மேற்குறிப்பிட்டவாறு அடையாளங்காணப்பட்டவர்கள், பின்னர், சமூக ஊடகத்தின் மூலமாக, யூதர்களுக்கு எதிரான அவதூறுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். மேற்குறிப்பிட்ட அடையாளமானது, இரகசிய சமிக்ஞையாக வர்ணிக்கப்படுகிறது. ஏனெனில், மேற்படி அடையாளமானது, சாதாரண இணையத் தேடலில் தென்படாது என்று கூறப்படுகிறது.

இந்நிலையிலேயே, தனது வெறுப்புப் பேச்சு விதிகளை, மேற்குறித்த extension மீறுவதால், தனது storeஇல், குறித்த extensionக்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்த கூகுளானது, மேலதிகமாக எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

Coincidence detector எனப்படும் மேற்படி extension ஆனது, யூத மக்கள் மற்றும் பூகோள கட்டுப்பாடு தொடர்பான சதிக்கோட்பாட்டை பிரதிபலிக்கின்றதுடன், தீவிர வலதுசாரிக் குழுவான alt-right என்ற குழுவினாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது, ஏறத்தாழ 2,500 பயனர்களைக் கொண்டிருப்பதுடன், பொதுவான 8,800 யூதப் பெயர்களைக் கொண்ட தரவுத்தளத்தையும் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .