Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இது வரை, கொரோனாத் தொற்றுக் குறித்த தவறான தகவல்களை வெளியிட்ட 10 லட்சம் வீடியோக்களை நீக்கி உள்ளதாக யுடியூப்(வலையொளி) நிறுவனம் தெரிவித்துள்ளது.
யூடியூபில் உள்ள லட்சக்கணக்கான வீடியோக்களில் ஒரு சிறிய சதவிகிதம் மட்டுமே இது போன்ற தவறான தகவல்களுடன் பதிவிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி கொள்கைக்கு எதிரானவை என்பதுடன் கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பும் வீடியோக்களின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் அவை நீக்கப்பட்டதாகவும் யுடியூப் தலைமை தயாரிப்பு அதிகாரி நீல் மோகன் (Neal Mahon) கூறினார்.
இவை தவிர ஒவ்வொரு காலாண்டிலும், 10 பேர் கூட பார்க்காத சுமார் ஒரு கோடி வீடியோக்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 hours ago
03 Jul 2025
03 Jul 2025