2025 ஜூலை 28, திங்கட்கிழமை

ராக்கெட்டில் மனிதர்களுக்கு பதிலாக ரோபோ

Editorial   / 2025 ஜூலை 28 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


நிலாவில் இறங்கி மாதிரிகளை கொண்டு வரும் சந்திரயான் 4 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ககன்யான் திட்டத்தின் கீழ் மனிதர்களுக்கு பதிலாக ராக்கெட்டில் ரோபோவை அனுப்ப உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் நாராயணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " இஸ்ரோவும் நாசாவும் இணைந்து உருவாக்கிய (NISR - Nasa Isro Synthetic aperture Radar) புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஎஸ்எல்வி- எப் 16 ( GSLV F16) ராக்கெட் முலம் விண்வெளிக்கு  வரும் ஜூலை 30 ஆம் திகதி அனுப்பப்பட உள்ளது. இவை 740 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்படும்.

இந்த செயற்கைக்கோள் முக்கியமான அதிநவீன ரேடாராகும். இதன் மூலம், கடுமையான மேகம், மழை உள்ள காலங்களில் பூமியை 24 மணி நேரமும் மிக தெளிவாக புகைப்படம் எடுக்க முடியும். இவை, பூமியில் உள்ள வளங்கள், நிலச்சரிவு, பேரிடர் மேலாண்மை, பருவ நிலை மாற்றங்களை கண்டுபிடிக்க உதவும்.

குறிப்பாக, 12 நாட்கள் ஒருமுறை பூமியை முழுமையாக புகைப்படம் எடுக்க உதவும். எனவே, இவை இந்தியா, அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள குளோபல் கம்யூனிட்டி (Global Community) உள்ள அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய செயற்கைக்கோளாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து, ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் (Aditya-L1) குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் கடந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி பூமியில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தூரம் கொண்டு விடப்பட்டது.

இதன் பின்னர், கடந்த ஜனவரி 6 ஆம் திகதி சூரியனை ஆராய்ச்சி செய்த ஹை டெராபைட் டேட்டாக்கள் (High terabyte data) வெளியிடப்பட்டது. இதுவரை 20 டெராபைட் டேட்டாக்கள் அனுப்பியுள்ளோம். இதனை, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .