Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய அரசாங்கத்தின் உடல்களை, தொழில்முறை ரீதியிலான சைபர் தாக்குதலொன்று தாக்கியதாக ரஷ்யாவின் புலனாய்வுச் சேவை தெரிவித்துள்ளது.
இருபது வரையிலான நிறுவனங்களின் வலையமைப்புகளில், சைபர் உளவு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய பாதுகாப்புச் சேவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய வலையமைப்புகள் ஹக் செய்யப்பட்டமைக்கு யார் காரணம் என நம்புவதாக எவரையும் மத்திய பாதுகாப்புச் சேவை குறிப்பிடாதபோதும், இந்தப் புதிய ஹக்கிங் ஆனது, அதிகம் பேசப்படும் சைபர் ஹக்கிங்கை ஒத்திருப்பதாக தெரிவித்திருந்தது.
தவிர, குறித்த ஹக்கிங் ஆனது திட்டமிடப்பட்டு, தொழில்முறை ரீதியாக மேற்கொள்ளப்பட்டு, அரச நிறுவனங்கள், விஞ்ஞான மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள், ரஷ்யாவின் முக்கியமான கட்டமைப்புக்களை இலக்கு வைத்ததாக மத்திய பாதுகாப்புச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த malwareஇன் மூலம் கணினியிலுள்ள கமெராக்களும் ஒலிவாங்கிகளும் இயக்கப்பட்டதாகவும் கணினியினுடைய திரை பிரதீயீடு செய்யப்பட்டதாகவும், கணினியில் என்ன தட்டச்சு செய்யப்பட்டது அவதானிக்கப்பட்டதாகவும் மத்திய பாதுகாப்புச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி சம்பந்தப்பட்ட தரவு மீறல்களுக்கு ரஷ்யா குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே மேற்கூறப்பட்ட தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்நிலையில், மேற்படிக் குற்றச்சாட்டை மறுத்திருந்த ரஷ்ய அரசாங்கம், அமெரிக்காவிலிருந்து வருகின்ற நச்சுத்தன்மையான ரஷ்யாவுக்கெதிரான சொல்லாடல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago