2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வாட்ஸ் அப்-இல் வழங்கப்படும் ரகசிய அம்சம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 10 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாட்ஸ்அப் செயலியில் "சாட் லாக்" எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் சாட்களை பாதுகாப்பான ஃபோல்டரில் தனியே வைத்துக் கொள்ள முடியும். தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய "சீக்ரெட் கோட்" அம்சம் உங்களின் லாக்டு சாட்-களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துகிறது.

வாட்ஸ்அப் செயலியில் உருவாக்கப்பட்டு இருக்கும் சீக்ரெட் கோட் அம்சம் கொண்டு உங்களின் லாக்டு சாட்களுக்கு தனியே ஒரு பாஸ்வேர்டு வைத்துக் கொள்ளலாம். இந்த அம்சம் கொண்டு லாக்டு சாட்களை சர்ச் பாரில் டைப் செய்து தேட முடியும். இதனால் சீக்ரெட் கோட்-ஐ லாக்டு சாட்-இல் டைப் செய்து கூடுதலாக இணைக்கப்பட்ட சாதனங்களிலும் தேட முடியும்.

லாக்டு சாட்களுக்கு பாஸ்வேர்டு-ஆக எழுத்துக்கள் மட்டுமின்றி எமோஜிக்களையும் பயன்படுத்தலாம். புதிய அம்சம் கொண்டு லாக்டு சாட்களுக்கு பிரத்யேக பாஸ்வேர்டு உருவாக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே வாட்ஸ்அப்-இல் உள்ள ஆப் லாக் அம்சம் மூலம் கைரேகை, ஃபேஸ் அன்லாக் அல்லது பின் மூலம் பாதுகாக்கும் வசதி வழங்கப்படுகிறது.

சாட் லாக் தனிப்பட்ட சாட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது, கஸ்டம் பாஸ்வேர்டு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதோடு எளிதில் தேடவும் வழிவகை செய்கிறது. சாட் லாக் அம்சம் அறிவிக்கப்பட்ட போதே, இது போன்ற அம்சத்தை வழங்குவதாக வாட்ஸ்அப் அறிவித்து இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .