Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 02:58 - 1 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 சந்திரனை 2.1 கி.மீ நெருங்கிய நிலையில் அதனிடம் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது விக்ரம் லேண்டர் எங்கே இருக்கின்றது என்ற தகவல் தெரியவில்லை. இருப்பினும், காணாமல் போன விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த அடுத்த 14 நாள்கள் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது விக்ரம் லேண்டர் எங்கு இருக்கிறது என்பது கண்டறிப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, முன்னதாக, இஸ்ரோ சிவன் மேலும் கூறியபோது, ‘சந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆயுட்காலம் 7.5 ஆண்டுகள் உள்ளது. சந்திரயான் 2 ஆர்பிட்டரில் அதிக எரிபொருள் இருப்பதால் அது தாராளமாக 7.5 ஆண்டுகள் செயல்படும்.
மேலும் இதில் மிக நவீன கமெராவும் உள்ளது. இந்த கமெராவும் 7 ஆண்டுகள் வலம் வந்து நிலவு முழுவதையும் தெளிவாக படம் பிடித்து அனுப்பும் வல்லமை கொண்டது.
எனவே சந்திரனின் தரைக்கு 2 கிலோமீற்றர் தொலைவில் தொடர்பு துண்டிக்கப்பட்ட லேண்டர் விக்ரமை கண்டுபிடிக்க இந்த கேமிராவால் வாய்ப்பு உள்ளது. தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள லேண்டருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த அடுத்த 14 நாள்கள் முயல்வோம். கமெரா உதவியால் கண்டுபிடிக்கப்பட்டு அதனுடன் இணைப்பு கிடைத்தால், அதன் பின்னர் வழக்கமான ஆய்வுப் பணிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கப்படும் என்று கூறினார்.
மேலும் சந்திரயான் 2 விண்கலத்தை பொறுத்தவரை அது முழு தோல்வி அல்ல. கிட்டத்தட்ட 95 சதவிகித வெற்றி கிடைத்திருக்கிறது. 30 கிலோமீற்றரில் இருந்து 2 கிலோமீற்றர் தூரம் வரை சென்றோம். கடைசி கட்டத்தில் மட்டுமே சிக்கல் ஏற்பட்டது. பிரதமரின் நம்பிக்கையான வார்த்தைகளால் எங்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளது. இனி அடுத்த கட்ட ஏவுதல்களுக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது என்று இஸ்ரோ சிவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என்பது கண்டறியப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “நிலவுக்கு மேலே 2.1 கி.மீ தொலைவில் சுற்றிவந்த போது, தகவல் தொடர்பு கட்டுப்பாட்டை இழந்த விக்ரம் லேண்டர் தற்போது எங்கே இருக்கிறது என்பது, நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிலவில் தரையிறங்க வேண்டிய இடத்திற்கு 500 மீ தொலைவில் முழுமையாக லேண்டர் இருக்கிறது. ஆனால், நிலவுக்கு அருகில் துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பு கிடைக்கவில்லை. அதனுடன் தகவல் தொடர்பு கொள்ள தீவிரமுயற்சி மேற்கொண்டுவருகிறோம். இந்த முயற்சியில் 95% வெற்றிதான் என சிவன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோவில் முயற்சி வெற்றியடைய வேண்டுமென பலரும் வாழ்த்தி ஊக்கம் கொடுத்து வருகின்றனர்.
Mahendra.J Sunday, 08 September 2019 01:52 PM
I am really happy to say now hats off to our NASA team and team head Mr.sivan sir. Further your analyzing of vikram-2 process. Jai Hind Jai Hind Jai Hind
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
37 minute ago