2025 மே 01, வியாழக்கிழமை

விவசாய நிலங்களை கண்காணிக்கும் ரோபோக்கள்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாயிகளின் பயிர் விளைச்சலை மேம்படுத்த, நிலத்தில் தனித்தனிச் செடிகளை கண்காணிக்கும் வகையில் மாதிரி ரோபோக்களை கூகுளின் துணை நிறுவனமான ஆல்ஃபபெட் அறிமுகப்படுத்தியுள்ளது.

விளைநிலத்தில் விளைச்சலை சேதப்படுத்தாத அளவிற்கு நகரும் இந்த ரோபாக்கள், பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன என்பது குறித்த பெருமளவிலான தரவுகளை சேகரிக்கும்.

உலகை மாற்றும் தொழில்நுட்பம் உருவாக்குவதை இலக்காக வைத்திருக்கும், ஆல்ஃபபெட் நிறுவனத்தின் பிராஜெக்ட் மினரெல் திட்டத்தை தலைமை தாங்கும் எலியோட் கிராண்ட் கூறுகையில், "விவசாயத்துறையில் உணவு எப்படி உருவாக்கப்படுகிறது என்கிற முறையை மாற்ற இந்த தொழில்நுட்பம் உதவும் என நம்புவதாக," தெரிவித்தார்.

"ஒவ்வொரு பயிர், செடியையும் கண்காணித்து, அதற்கு தேவையான சத்தை கணித்து கொடுத்தால் எப்படி இருக்கும்," எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உலகில் அதிகரித்துவரும் உணவுக்கான தேவை, மற்றும் உணவை தயாரிக்க நிலையான முறை வேண்டும் என்பது குறித்து தெரிய வைப்பதே தங்கள் முக்கிய நோக்கம் என்று இத்திட்டக்குழு கூறுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .