2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

விவசாயிகளின் வயலில் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள்

Princiya Dixci   / 2021 மார்ச் 03 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, தமிழக அரசு, ‘உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை, நடப்பாண்டு முதல் செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தின்படி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் உழவர் குழுக்களை சந்திப்பார்கள். விவசாயிகளின் வயலில் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் நடத்தி, பயிற்சியளிப்பர். 

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒரு தொடர்பு மையம் அமைக்கப்படும். வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி, முக்கிய தொழில்நுட்ப செய்திகள், விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, இந்த உழவர் அலுவலர் தொடர்புத் திட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு, தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .