2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

வெற்றிகரமாக முடிந்த விண்வெளி சுற்றுலா

Freelancer   / 2024 செப்டெம்பர் 16 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலன் மஸ்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம், விண்வெளிக்கு சுற்றுலா பயணியரை அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் சார்பில், 'ஸ்பேஸ்எக்ஸ் போலாரிஸ் டான்' என்ற விண்கலம், கடந்த 10ஆம் திகதி விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் உட்பட நான்கு பேர் பயணம் செய்தனர்.

பூமியில் இருந்து 740 கி.மீ., உயரத்தில் நிறுத்தப்பட்ட விண்கலத்தில் இருந்து ஒவ்வொருவராக வெளியே வந்து விண்வெளியில் நடைப்பயணம் மேற்கொண்டனர். முதலில், இந்த திட்டத்துக்கு பெருமளவு நிதியுதவி அளித்த பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவரான ஜாரெட் ஐசக்மேன் விண்கலத்தில் இருந்து முதலில் வெளியே வந்தார். புவிஈர்ப்பு விசை இல்லாத வெற்றிடத்தில், அவர் சிறிது நேரம் மிதந்து நடைபயணம் செய்தார்.

அவரை தொடர்ந்து பொறியாளர் சாரா கில்லிஸ் விண்வெளியில் நடந்தார். உடன் சென்ற ஸ்பேஸ் எக்ஸின் அன்னா மேனன் மற்றும் ஸ்காட் பொட்டீட் ஆகியோரும் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக நீடித்த விண்வெளி சுற்றுலா பயணம் முடிந்து நான்கு பேரும் வெற்றிகரமாக நேற்று பூமிக்கு திரும்பினர். புளோரிடாவில் உள்ள ட்ரை டோர்ட்சுகாஸ் கடலில், பெராசூட் உதவியுடன் அவர்கள் தரையிறங்கினர். இது தனியார் விண்வெளி பயணத்தில் முதல்முறை நிகழ்த்தப்பட்ட சாதனை.

இதற்கு முன், 12 நாடுகளைச் சேர்ந்த 263 பேர் விண்வெளியில் நடந்துள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் விண்வெளி திட்டத்தில் ஈடுபட்ட விண்வெளி வீரர்கள். முதன்முறையாக, சுற்றுலா பயணியாக சென்று, விண்வெளியில் நடந்த பெருமையை ஐசக்மேன் பெற்றுள்ளார். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் விண்வெளிக்குச் செல்லலாம் என்பதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிரூபித்துள்ளது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .