Thipaan / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்
ஆடி அமாவாசை தினமான இன்று, இறந்தவர்களுக்காக தர்பணம் செய்யும் நிகழ்வு, சமூத்திரகம தீரத்தக் கரையில் இடம்பெற்றது.
சமூத்திரகம தீரத்தக் கரையில், இரத்தின சிங்கப்பிள்ளையார் எழுந்தருளி சிறப்பாக நடைபெற்ற இவ்வுற்றசவத்தில், பலநூற்றுக்கணக்கான அடியார்கள் தமது மூதாதேயர்களுக்கு பிதிர்க்கடன் செலுத்தினர்.
இவ்வாறே மூதூர் பிரதேசத்தில் சிறந்து விளங்கும் மகாவலி கங்கைக்கரையில் இவ்வுற்சவம் இடம்பெற்றது. இங்கு கங்குவேலி ஆதிசிவன் ஆலயத்தில் இருந்தும் மல்லிகைத்தீவு மங்களேஸ்வரர் ஆலயத்தில் இருந்தும் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்தும் தெய்வங்கள் கங்கைகரையில் எழுந்தருளச் செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு தமது பிதிர்க்கடன்களை நிறைவேற்றினர்.




2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago