Editorial / 2026 மே 01 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ. அச்சுதன்
திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று சிவனாலயத்தில் சித்திரா பௌர்ணமி (நிறைமதி) வழிபாடும், பிதுர் தர்ப்பண நிகழ்வும் இன்று (01) வெள்ளிக்கிழமை மிக விமரிசையாக நடைபெற்றன.
நிகழ்வின் விபரம்:
இன்று காலை சிவனாலயத்தில் விசேட கிரியைகள் மற்றும் வழிபாடுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து, கன்னியாவிலுள்ள ஏழு புண்ணிய தீர்த்தச் சுனைகளில் நீராடிய பக்தர்கள், இறையடி சேர்ந்த தமது தாய்மார்களுக்காகப் பிதுர் தர்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகள்:
சிவனாலய அறங்காவலர் சபை, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இம்முறை கன்னியா சித்திரா பௌர்ணமி தின வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தன.
இதில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தமது பிதுர்க்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், சிவ வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.



4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago