Editorial / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

உடபுஸ்ஸலாவ நகரில் அமைந்துள்ள சென்மாக்றெட் தோட்ட ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா வெகு விமர்சையாக (05.02.2023) ஞாயிற்று கிழமை காலை நடைபெற்றது.
ஆலய பிரதம குரு குகபிரதிஸ்டாபதி சத்தியோஜாத சிவாச்சாரியார் சிவஸ்ரீ த.தேவேந்திரன் குருக்கள் தலைமையில், பிரதிஸ்டா திலகம் சிவாகம சிரோண்மணி கிரியா தத்தவநிதி சிவஸ்ரீ தியாக சங்கராஜா சிவாச்சாரியார் நல்லாசியுடன் மஹா கும்பாபிஷேகம் இடம் பெற்றது.
ஆலய நிர்வாக சபையினர் உட்பட ஆயிரக்கணக்கான பக்த பெருகோடிகள் புடைசூழ மஹாகும்பாபிஷேக பெருவிழா காலை 09.30 மணி முதல் 11.30 மணிவரை அமையபெற்ற சுப முகூர்த்த வேளையில் வேத பாராயணங்களுடன் மங்கள மேலங்கள் முழங்க அடியார்களின் அரோஹராவுடன் நடந்தேறியது. ஆ.ரமேஸ்









46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
1 hours ago