Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2024 ஜூன் 24 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
மேல் மாகாணம் களுத்துறை நகரில் பழமை வாய்ந்த ஆலயமான வேலாபுரம் திருகோவிலின் வருடாந்த அலங்கார உற்சவம்
ஜூன் 19 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இதை தொடர்ந்து 20 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு பாற்குடபவனி நடைபெற்று எம்பெருமானுக்கு சங்காபிஷேகம் நடைப்பெற்றதுடன் மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு மாம்பழ திருவிழா நடைபெற்று மறுநாள் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு நித்திய பூஜை, விஷேட வசந்த மண்டப பூஜையுடன் பக்தர்கள் புடைசூழ மங்கள வாத்தியங்கள் முழங்க பேண்ட் வாத்திய கலைஞர்களுடன் நடன கலைஞர்களின் நடன நிகழ்வுகளுடன் தேர் பவனி களுத்துறை நகரம் சென்று ஆலயத்தை வந்தடைந்தது.
22 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தீர்த்தோற்சவம் கொடியிறக்கம் செய்யப்பட்டு அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
30 Apr 2025
30 Apr 2025