2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வெருகல் பாதயாத்திரை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு - திருகோணமலை எல்லையில் அமைந்துள்ள வெருகல் திருத்தலத்தை நோக்கிய பாதயாத்திரை, கல்முனை - மட்டக்களப்பு வீதி வழியாக இன்று செவ்வாய்க்கிழமை (08) மட்டக்களப்பை வந்தடைந்தது.

எதிர்வரும் திங்கடகிழமை (14) வெருகல் சித்திலோயுத சுவாமி ஆலய கொடியேற்றம் இடம்பெவுள்ளதை முன்னிட்டு பாதயாத்திரை கடந்த சனிக்கிழமை (05) காரைதீவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதாக யாத்திரைக் குழுவின் தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் தெரிவித்தார்.

4ஆவது தடவையாக இடம்பெறும் இப்பாத யாத்திரையில் 30 அடியார்கள் கலந்துகொண்டுள்ளதாகவும் இன்று இரவு பாதயாத்திரைக் குழுவினர் சித்தாண்டி முருகன் ஆலயத்தில் தங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .