Niroshini / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கம் ஏற்பாடு செய்த ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று சனிக்கிழமை காரைதீவில் நடைபெற்றது.
இதனையொட்டி,காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து பாற்குட பவனி ஆரம்பமாகி கொம்புச் சந்திக்கு சென்று அங்கு கிருஷ்ண பகவானின் விளையாட்டுடன் உறி அடிக்கப்பட்டு உள்வீதி வழியாக ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தை சென்றடைந்தது.
இதன் பின்னர் கிருஷ்ண பகவானுக்கு விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன் கிருஷ்ண பகவான் அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் இடப்பட்டு தாலாட்டு பாடல் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து சிறு குழந்தைகள் தொட்டிலில் இடப்பட்டு உறவினர்களால் தாலாட்டுப் பாடல்கள் பாடப்பட்டு அன்னதானம் வழங்குதலுடன் விழா நிறைவு பெற்றது.

27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago