Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரஸீன் ரஸ்மின்)
புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் நேற்று (14) காலை 9.00 முதல் 12 மணிக்கு இடைப்பட்ட சுபவேளையில் ஆலய பிரதம குருவும் தர்மகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ எஸ்.பந்தமநாபக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
கொடிச்சீலை, அலங்கரிக்கப்பட்ட யானையின் மேல் வைத்து வெளிவீதி வலம் வந்து, ஆலய பிரதம குருவிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் கொடிச்சீலை மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு விஷேட வசந்த மண்டப பூஜையை என்பன இடம்பெற்றது.
மேற்படி பூஜையை மாத்தளை அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ. சிவானந்த குருக்கள் நடத்தினார்.
பின்னர் கொடிச்சீலை கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு மந்திர பாராயமனம் ஓதப்பட்டு கொடியேற்றம் மங்கள வாத்தியம் முழங்க பக்தர்களின் அரோஹர என்ற நாமம் முழங்க இடம் பெற்றதுடன், பின்னர் கொடிக் கம்பத்திற்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மஹோற்சவத்தின் கொடியேற்றத்தில் நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இன மத பேதமின்றி கலந்து கொண்டனர்.
உற்சவங்கள் தொடர்ந்து 28 தினங்கள் இடம்பெறவுள்ளதுடன், இதில் முக்கிய உற்சவங்களாக விநாயகர் உற்சவம், சுப்ரமணியர் உற்சவம், மஹா விஷ்ணு உற்சவம், தீ மிதிப்பு உற்சவம், பிஷாடனர் உற்சவம், நடேசர் உற்சவம், வேட்டைத்திருவிழா, தேர்த் திருவிழா மற்றும் தீர்த்த திருவிழா இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
30 Sep 2023