2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

விநாயகர் சதுர்த்தி

Editorial   / 2021 செப்டெம்பர் 10 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேழமுகத்து விநாயகன் பிறந்த நாளான இன்று (10) விநாயகசதுர்த்தி நாளாகும். ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வருகின்ற சதுர்த்தி தினத்தில் விநாயகப்பெருமான பிறந்தார்.

அதனையொட்டி இராமகிருஸ்மிசன் மட்டக்களப்பு கல்லடி ஆச்சிரமத்தில் விசேட பூஜையும் வழிபாடும் இடம்பெற்றது.விநாயகப்பெருமான் அறுகம்புல்லினால் அலங்கரிக்கப்பட்டு 21 நிவேதனங்கள் படைக்கப்பட்டன.

நாடு கொரோனாத் தொற்றிலிருந்து விடுபட வேண்டி அங்கு விசேட யாகமும் சிறப்புப்பூஜையும் இடம்பெற்றது.

இராமகிருஸ்மிசன் மட்டக்களப்பு கல்லடி ஆச்சிரம உதவிமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் இச்சிறப்பு பூஜையை நடத்தினார். சுகாதாரமுறைப்படி இல்லச்சிறுவர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.  

(படங்களும் தகவலும் வி.ரி.சகாதேவராஜா)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .